மாற்றுத்திறனாளிகளுக்கு ஆகஸ்ட் - 16 தனியார் வேலைவாய்ப்பு முகாம் !!

Update: 2024-08-13 06:30 GMT

மாற்றுத்திறனாளி

நாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஆக. 16) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தனியார் துறை நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.

எனவே, தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை, நிர்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்து கொள்ளலாம்.

இம் முகாமில், பங்கேற்கும் வேலையளிப்போரும், வேலைநாடுநரும் எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை.மேலும் விவரங்களுக்கு 04286--222260 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News