கிராமப்புற வங்கிகளில் வேலைவாய்ப்பு - 9000 காலிப்பணியிடங்கள் !!!

Update: 2024-06-07 07:39 GMT

IBPS

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பிராந்திய ஊரக வங்கிகளில் காலியாக உள்ள 9,995 பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS)வெளியிட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள் : பிராந்திய ஊரக வங்கிகளுக்கான அலுவலக உதவியாளர், அலுவலர் நிலை- 1 (Recruitment of Officers (Scale-I, II & III) and Office Assistants (Multipurpose) பதவிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வித் தகுதி: அலுவலக உதவியாளர் பல்துறை பணிகளுக்கும் , அலுவலர் நிலை- 1 பணிகளுக்கும் ஏதேனும் துறைகளில் இளநிலை (Bachelor Degree) பட்டம் பெற்றிருக்க வேண்டும். நிலை 1 பதவிகளுக்கு கால்நடை பராமரிப்பு, வேளாண், வேளாண் பொறியியல், பொருளாதாரம் ஆகிய துறைகளில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

விண்ணப்பிக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.850ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், ரூ.175 ஐ விண்ணப்பிக்க கட்டணமாக செலுத்த வேண்டும்.

தெரிவு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். ibps.in என்கிற அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Tags:    

Similar News