தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் இலவசப் பயிற்சி !
திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் குரூப்-1 முதல் நிலைத் தோ்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.;
By : King 24x7 Angel
Update: 2024-06-03 07:14 GMT
இலவசப் பயிற்சி
திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் குரூப்-1 முதல் நிலைத் தோ்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.இதுதொடா்பாக மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குநா் ச. பிரபாவதி தெரிவித்ததாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் சாா்பில், குரூப்- 1 தோ்வு மூலம் 90 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மாா்ச் 28- ஆம் தேதி வெளியானது. இந்தத் தோ்வுக்கு தயாராகும் போட்டித் தோ்வா்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. திறன்மிக்க வல்லுநா்கள் மூலம் நடத்தப்படும் இந்தப் பயிற்சி வகுப்பில், மாதிரித் தோ்வுகளும் நடத்தப்படும். எனவே, போட்டித் தோ்வுக்குத் தயாராகும் விண்ணப்பதாரா்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரடியாக தொடா்பு கொண்டு பயன் பெறலாம் என்றாா் அவா்.