10ம் வகுப்பு படித்திருந்தால் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை!
கோவை மாவட்டம், பேரூர் வட்டம், பேரூர் அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப இந்து மதத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 05
பணியிடம் கோயம்புத்தூர், தமிழ்நாடு
ஆரம்ப தேதி 06.12.2024
கடைசி தேதி 03.01.2025
1. பதவியின் பெயர்: இளநிலை உதவியாளர்
சம்பளம்: மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்
Click here
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.
2. பதவியின் பெயர்: சீட்டு விற்பனை எழுத்தர்
சம்பளம்: மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.
3. பதவியின் பெயர்: பதிவறை எழுத்தர்
சம்பளம்: மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.
4. பதவியின் பெயர்: துப்புரவு பணியாளர்
சம்பளம்: மாதம் ரூ.10,000 முதல் ரூ.31,500 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 06.12.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.01.2025 மாலை 5.45 மணி வரை
விண்ணப்பிக்கும் முறை?
விண்ணப்ப படிவத்தினை https://perurpatteeswarar.hrce.tn.gov.in/ என்ற திருக்கோயில் இணையதளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது திருக்கோயில் அலுவலகத்தில் ரூ.100/- செலுத்தி விண்ணப்பத்தினை அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: உதவி ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயில், பேரூர், பேரூர் வட்டம், கோயம்புத்தூர் மாவட்டம் – 641010.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.