8ம் வகுப்பு தேர்ச்சியா அப்போ கவலை வேண்டாம் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு !!

Update: 2024-10-22 05:31 GMT

நீதிமன்றம் வேலைவாய்ப்பு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் - குற்ற வழக்கு தொடர்பு துறை, போக்சோ நீதிமன்றம்

வகை - தமிழ்நாடு அரசு வேலை

காலியிடங்கள் - 01

பணியிடம் - தர்மபுரி, தமிழ்நாடு

ஆரம்ப தேதி - 18.10.2024

கடைசி தேதி - 05.11.2024

சம்பளம்: மாதம் Rs.15,700 முதல் Rs.58,100 வரை

Advertisement

கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு: ST/SC/ SCA – 18 வயது முதல் 37 வயது வரை, MBC/BC/ BCM – 18 வயது முதல் 34 வயது வரை, UR – 18 வயது முதல் 32 வயது வரை

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்ப படிவத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: உதவி இயக்குநர் அலுவலகம், குற்ற வழக்கு தொடர்பு துறை, ஆயுதப்படை காவலர் பயிற்சி வளாகம், வெண்ணம்பட்டி ரோடு, தர்மபுரி மாவட்டம் 636 705.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

https://cdn.s3waas.gov.in/s366368270ffd51418ec58bd793f2d9b1b/uploads/2024/10/2024101819.pdf

https://cdn.s3waas.gov.in/s366368270ffd51418ec58bd793f2d9b1b/uploads/2024/10/2024101832.pdf

https://dharmapuri.nic.in/notice_category/recruitment/

Tags:    

Similar News