IFS Recruitment 2024 ! இந்திய வனத்துறையில் 150 பணியிடங்கள் அறிவிப்பு !

Update: 2024-02-22 07:21 GMT

IFS Recruitment

IFS Recruitment 2024. இந்திய வனப் பணி Indian Forest Services என்பது இந்திய அரசு தனது காடுகளின் அறிவியல் மேலாண்மைக்காக அதிகாரிகளை அகில இந்திய அளவில் தேர்வு செய்வதற்காக யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வில் ஒன்றாகும். இத்தேர்வு முதல்நிலை மற்றும் முக்கிய தேர்வு என இரண்டு பிரிவுகளாக நடத்தப்படும். தற்போது இது அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம்.

வகை - அரசு வேலை

ஆணையம் -இந்திய வன சேவை

பணிபுரியும் இடம் -இந்தியாவில் எங்குவேண்டுமானாலும் பணியமர்த்தப்படுவார்கள்

பதவியின் பெயர் -இந்திய வன சேவை அதிகாரி (Indian Forest Services Officer)

காலிப்பணியிடங்கள் - 150

வயது தகுதி - 21- 32

கல்வித்தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து கால்நடை பராமரிப்பு/மருத்துவ அறிவியல்/தாவரவியல்/வேதியியல்/புவியியல்/கணிதம்/இயற்பியல்/புள்ளியியல்/விலங்கியல்/விவசாயம்/வனவியல் அல்லது பொறியியலில் இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

சம்பளம் -அரசு விதிகளின்படி நிர்ணயிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை- ஆன்லைன் மூலம்

விண்ணப்பிக்கும் தேதி -14.02.2024– 05.03.2024

விண்ணப்ப கட்டணம் - பெண்கள்/SC/ST/PwD வேட்பாளர்கள் தரவிர்த்து மற்றவர்களுக்கு ரூ.100/-

தேர்ந்தெடுக்கும் முறை-இரு பிரிவு எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

தேர்வின் விபரங்கள்:

முதல் நிலை தேர்வானது (Preliminary) 26.05.2024 அன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு நடைபெறும் இடங்கள்:

தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

https://upsc.gov.in/sites/default/files/Notif-IFSP-24-engl-140224.pdf

அதிகாரப்பூர்வ இணையதளம்

https://upsc.gov.in/examinations/active-exams

Tags:    

Similar News