ஒரு டிகிரி முடித்தவர்களுக்கு நிலக்கரி நிறுவனத்தில் வேலை - 34 காலிப்பணியிடங்கள் !!!

Update: 2024-05-14 08:30 GMT

வேலை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பொதுத்துறையை சேர்ந்த என்.எல்.சி., என அழைக்கப்படும்நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு, 24.4.2024க்குள் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது கடைசி தேதி 4.6.2024 என நீட்டிக்கப்பட்டுள்ளது.

காலியிடம் - கிளரிக்கல் அசிஸ்டென்ட் 17, தொழிற்சாலை பணியாளர் 9 (டிராப்ட்ஸ்மேன் 1, எலக்ட்ரீசியன்3, பிட்டர் 2, மெக்கானிக் 2, வயர்மேன் 1), ஜூனியர் இன்ஜினியர் 8 (சிவில் 5, மெக்கானிக்கல் 2, எலக்ட்ரிக்கல் 1) என மொத்தம் 34 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி - கிளரிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி, ஜூனியர் இன்ஜினியர் பணிக்கு டிப்ளமோ, மற்ற பணிக்கு ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.

வயது - 1.3.2024 அடிப்படையில்30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை - எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை - ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம் - ரூ. 595. எஸ்.சி., /எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 295

கடைசிநாள் - 4.6.2024

விவரங்களுக்கு - nlcindia.in

Tags:    

Similar News