TNPSC Group 1 அறிவிப்பு 2024 – 90 பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

Update: 2024-04-16 08:46 GMT

குரூப்-1 சர்வீசஸ்

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான (Group 1) பணியிட அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு-I (குரூப்-1 சர்வீசஸ்) உள்ளிட்ட பதவிகளுக்கு நேரடி ஆட்சேர்ப்புக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு வரும் 28.03.2024 முதல் 27.04.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

நிறுவனம் - தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

பணியின் பெயர் -Deputy Collector,Deputy Superintendent of Police,Assistant Director

பணியிடங்கள் -90

விண்ணப்பிக்க கடைசி தேதி - 27.04.2024

விண்ணப்பிக்கும் முறை -Online

TNPSC குரூப் 1 காலிப்பணியிடங்கள்:

Deputy Collector – 16 பணியிடங்கள்

DeputySuperintendent of Police (Category-1) – 23 பணியிடங்கள்

AssistantCommissioner (Commercial Taxes) – 14 பணியிடங்கள்

Deputy Registrar of Co-operative Societies – 21 பணியிடங்கள்

Assistant Director of Rural Development – 14 பணியிடங்கள்

District Employment Officer – 1 பணியிடம்

District Officer (Fire and Rescue Services) – 1 பணியிடம்

என மொத்தம் 90 பணியிடங்கள் காலியாக உள்ளன.

TNPSC Group 1 வயது வரம்பு:

01.07.2024 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வித் தகுதி:

தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

முதற்கட்ட தேர்வு (Preliminary Examination (Single Paper)

முதன்மை எழுத்துத் தேர்வு

நேர்காணல் சோதனை மூலம் தேர்வு செய்யப்படுவர்.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 விண்ணப்ப கட்டணம்:

Registration Fee – Rs.150/-

Preliminary Examination Fee – Rs.100/-

Main Written Examination Fee – Rs.200/-

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறை மூலம் 28.03.2024 முதல் 27.04.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

Tags:    

Similar News