யூனியன் வங்கியில் வேலைவாய்ப்பு - மொத்தம் 1500 காலிப்பணியிடங்கள் !!
Update: 2024-10-30 06:00 GMT
பொதுத்துறையை சேர்ந்த யூனியன் வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'லோக்கல் வங்கி அதிகாரி' (எல்.பி.ஓ.,) பிரிவில் கர்நாடகா 300, தமிழகம் 200, ஆந்திரா 200, தெலுங்கானா 200, குஜராத் 200, கேரளா 100, மேற்கு வங்கம் 100, ஒடிசா 100 உட்பட மொத்தம் 1500 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
வயது: 20-30 (1.10.2024ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு.
தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, வேலுார் உட்பட 16 நகரங்கள்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ.850. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 175.
கடைசிநாள்: 13.11.2024
விவரங்களுக்கு: unionbankofindia.co.in