திருத்தணியில் கர்ப்ப விநாயகர் கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை
திருத்தணி நகராட்சியில் கற்பக விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்துக் கொள்ளை கொள்ளையர்கள் அட்டகாசம்.....
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய நகர் பகுதியில் கற்பக விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இந்நிலையில் நேற்று இரவு பூஜைகள் முடிந்து கோவில் பூட்டப்பட்டது. இந்நிலையில் காலை வழக்கம்போல் கோவிலை திறக்க பூசாரி வந்து பார்த்தபோது, கோவில் பூட்டு உடைக்கப்பட்டு, கோவில் வளாகத்தில் இருந்த உண்டியலில் இருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படும் இந்த உண்டியலில் 50 ஆயிரம் பணம் இருந்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து கோவில் கொள்ளை அடித்துக் கொண்ட மர்ம நபர்கள் அருகில் உள்ள மாதவன் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பணம் எதுவும் இல்லாததால் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த திருத்தணி போலீசார் கொள்ளை நடந்த இடத்தில் ஆய்வு செய்தனர். திருத்தணி பகுதியில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து வழிப்பறி சம்பவங்களும், கொள்ளைச் சம்பவம் கூட நடைபெற்று வருகிறது. திருத்தணி காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் இல்லாததால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீசார் திணறி வருகின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் திருத்தணி காவல் நிலையத்திற்கு விரைவில் குற்றப்பிரிவின் இன்ஸ்பெக்டர் பணியிடத்தை நிரப்ப வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.