கணவனை பண்டிகை நாட்களில் மட்டும் கொள்ளையடிக்க அனுப்பும் மனைவி

Update: 2024-10-11 15:39 GMT

சொகுசு வாழ்க்கை வாழ கணவனை பண்டிகை நாட்களில் மட்டும் கொள்ளை அடிக்க அனுப்பும் மனைவி





 


படப்பை அருகே கிராம நிர்வாக அலுவலரின் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளை

சொகுசு வாழ்க்கை வாழ நினைத்த மனைவியை சிறைக்கு கூட்டிச் சென்ற கணவன்

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த கரசங்கால் பகுதியில் வசித்து வருபவர்,சங்கர் (35 ) ஹேமாவதி (32) சங்கர் ஏர்டெல் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகின்றார்.ஹேமாவதி

Advertisement

வளையக்கரணை பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகின்றார்.

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி சனிக்கிழமை அன்று விநாயகர் சதுர்த்தி பூஜையை கொண்டாட காஞ்சிபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவில் பூட்டி இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக மணிமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற

மணிமங்கலம் குற்றப்பிரிவு போலீசார் ஆய்வு மேற்கொண்ட போது ஆணி பிடுங்கும் கௌபர் மூலமாக வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர் படுக்கை அறையில் உள்ள பீரோவில் இருந்த சுமார் 40 லட்சம் மதிப்புள்ள 50 சவரன் தங்க நகை வெள்ளி பொருட்களும் ஐந்தாயிரம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிய வந்தது.

உடனே கை ரேகை நிபுணர்களை வரவைத்து ஆய்வு மேற்கொண்ட போது குற்றவாளியின் கைரேகை

சிக்காததால் குற்றவாளியை பிடிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்தனர்,

கொள்ளைச் சமம் அரங்கேறிய வீட்டில் சிசிடிவி காட்சிகள் இல்லாததால் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்த போது இருசக்கர வாகனத்தில் இருவர் செல்வது தெரியவந்தது அந்த காட்சிகளை கைப்பற்றி தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்த போது வாகனத்தின் பதிவின் தெளிவாக தெரிய வந்தது அதன்பிறகு வாகனத்தின் பதிவினை வைத்து பார்த்தபோது

மதுராந்தகம் இந்திரா நகர் பகுதியில் சேர்ந்த லோகேஷ் (எ) லோகேஷ்வரன் (23) என்பவரின் வாகனம் என தெரியவந்தது,

அதன் பிறகு லோகேஷை கைது செய்ய மதுராந்தகம் சென்றபோது அவர் இங்கிருந்து வீடு காலி செய்து விட்டு சென்றுவிட்டதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தன் பேரில் அதன் பிறகு அவரது தொலைபேசி எண்ணை வாங்கி சிக்னலை ட்ரேஸ் செய்த போது மதுரையில் இருப்பது தெரிய வந்தது அதன் பிறகு லோகேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் ஏற்கனவே கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி வழக்கில் போலீசாரிடம் சீக்கி சிறைக்குச் சென்ற போது சிறையில் விருகம்பாக்கம் பகுதியில் சேர்ந்த திவாகர் (35) என்பவருடன் நட்பு ஏற்பட்டது.

கையில் பணம் இல்லாததால் நானும் திவாகரன் சேர்ந்து கரசங்கால் பகுதியில் தனியாக இருந்த வீட்டில் கொள்ளையடித்ததாக ஒப்புக் கொண்டார், என்னிடம் 15 சவரன் தங்க நகைகளை திவாகர் கொடுத்ததும் அந்த நகைகளை

விற்று அந்த பணத்தில் புதிய இருசக்கர வாகனம் ஒன்றை வாங்கியதாகவும், மீதமுள்ள பணத்தில் என் மனைவிக்கு தங்க செயின் வாங்கி கொடுத்ததாக

தெரிவித்தார்.

அதன் பிறகு விருகம்பாக்கம் சென்ற போலீசார் திவாகரை கைது செய்தபோது பண்டிகை நாட்களில் மட்டுமே கொள்ளையடித்து வருவதாகவும்

ஒவ்வொரு முறையும் என் மனைவி தான் என்னை கொள்ளையடிக்க சொன்னதாக பகீர் வாக்குமூலம் அளித்தார், அதன் பிறகு திவாகர் மனைவியான

நித்திய ரூபி(37)யை கைது செய்தனர். மேலும் நகை விற்பதற்கு உடந்தையாக இருந்த

நித்திய ரூபியின் சகோதரியான வளசரவாக்கம் காமராஜ அவன்யூ பகுதியைச் சேர்ந்த ராதிகா (43) ஆகிய மூவரையும் கைது செய்து

மணிமங்கலம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் சொகுசு வாழ்க்கை வாழ கணவனை கொள்ளையடிக்க அனுப்பி வைத்துவிட்டு கொள்ளையடித்து வரும் நகைகளை விற்று பல வருடங்களாக சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரிய வந்தது.

கொள்ளையடித்த நகைகளில் திவாகருக்கு கிடைத்த பங்கான 35 சவரன் தங்க நகைகளை விற்று பணமாக்கி இலங்கையில் உள்ள உறவினருக்கு 5 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.

அதன் பின்னர் திவாகர் மற்றும் லோகேஸ்வரன் இருவரிடம் 32 சவரன் தங்க நகைகளையும் புதிதாக வாங்கிய இருசக்கரம் வாகனம் ஆகியவை பறிமுதல் செய்தனர்.

மேற்படி நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

பூட்டியிருக்கும் வீடுகளை நோட்ட மிட்டு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த கணவன் மனைவி இருவரும் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றார்.

கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றி வரும் கொள்ளையர்களை ஒவ்வொரு முறையும் குற்றவாளிகளை இரவு பகலும் தூங்காமல் சிரமப் பட்டு போலீசார் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் குற்றவாளிகள் கொள்ளையடித்த முழு நகையும் பறிமுதல் செய்யமுடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகின்றது கரசங்கால் பகுதியில் 50 சவரன் தங்க நகை கொள்ளை அடிக்கபட்டதில் 32 சவரன் தங்க நகை மட்டுமே பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் வேதனையை அளிக்கின்றது..

குற்றவாளிகளை பிடிக்கத் தெரிந்த காவல்துறைக்கு அவர்களிடம் இருந்து நகைகளை பறிமுதல் செய்ய முடியாத சூழ்நிலைதான் காலம் காலமாக நிலை வருவது குறிப்பிடத்தக்கது

Tags:    

Similar News