கடல் வழியாக தங்கம் கடத்தியவர் கைது - 4 கிலோ பறிமுதல்
குந்துகால் கடல் பகுதி வழியாக இலங்கையில் இருந்து தங்க கட்டிகளை கடத்தி வந்தவரை கைது செய்த சுங்கத்துறை மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அவரிடமிருந்து 4.364 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.;
Update: 2024-02-04 06:53 GMT
பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்
ராமேஸ்வரம் அருகே குந்துகால் கடல் பகுதி வழியாக இலங்கையில் இருந்து தங்க கட்டிகளை கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறையின் மத்திய புலனாய் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதை அடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற சுகங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்துக்கிடமாக படகில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபரை பிடித்து விசாரணையில் ஈடுபட்டபோது முன்னுக்குப் பின் முரணான பதிலை கூறியதை அடுத்து அவரை சோதனை இட்டதில் இலங்கையில் இருந்து 4.364 கிலோ கிராம் கடத்தல் தங்க கட்டிகள் கடத்தி வந்தது தெரிய வந்ததை அடுத்து அவரிடம் இருந்து தங்க கட்டிகளை பறிமுதல் செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.