டியூசனுக்கு சென்ற 10 ம் வகுப்பு மாணவர் மாயம்: பெற்றோர் புகார்

குலசேகரம் அருகே டியூசனுக்கு சென்ற 10 ம் வகுப்பு மாணவர் மாயம்.பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.;

Update: 2024-06-18 16:18 GMT

மாயமான மாணவர்

குலசேகரம் அருகே ஆரணிவிளை பகுதியை சேர்ந்தவர் ஜேசுராஜ். இவர் குலசேகரம் பகுதியில் ஒரு பேக்கரி கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார் இவருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர் மகன் ஜினோ.

இவர் புத்தன்கடை பகுதியில் உள்ள பள்ளிகூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார் தினமும் அரசு பேருந்தில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம்.

தினமும் மாலையில் நாகக்கோடு பகுதியில் உள்ள டியுசன்சென்டரில் டியுசன் படிக்க செல்வது வழக்கம் நேற்று மாலையில் சுமார் 4 மணி அளவில் வீட்டில் இருந்து டியுசன் படிப்பதற்க்காக செல்வதாக கூறி விட்டு தனது மிதிவண்டியில் சென்றார்.

Advertisement

ஆனால் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை உடனே ஜேசுராஜ் டியுசன்சென்டரில் சென்று விசாரித்த போது அங்கு செல்லவில்லை என்பது தெரிய வந்தது. அவரது நன்பர்கள் உதவினர்களிடம் விசாரித்த போது எந்த தகவலும் கிடைக்கவில்லை சிகப்பு நிற சட்டையும் கருப்பு நிற பேண்டும் அணிந்துயிருந்தார்.

ஜேசுராஜ் கொடுத்த புகாரின் பேரில் குலசேகரம் போலிசார் வழக்கு பதிவு அந்த பகுதியில் உள்ள சிசிவி கேமராக்களை ஆய்வு செய்து தீவிர விசாரனை மேற்கொண்டு காணாமல் போன மாணவனை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News