1400 கிலோ கடத்தல் பீடி இலைகள் பறிமுதல்
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
Update: 2024-03-01 02:35 GMT
தூத்துக்குடியில் கியூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய அனிதா தலைமையில் உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ், தலைமை காவலர் இருதயராஜ், ராமர், காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் இன்று அதிகாலை தருவைக்குளம் மீன்பிடி கிராமத்திற்கு தெற்கே உள்ள வெள்ளைப்பட்டி செல்லும் கடற்கரை சாலையில் ரோந்து சென்றபோது இலங்கைக்கு கடத்துவதற்காக சுமார் 35 கிலோ எடை கொண்ட 44 பண்டல்கள் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பைபர் படகு, லாரி, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் எடை சுமார் 1400 கிலோ. இதன் மதிப்பு ரூ. 20 லட்சம் ஆகும். இதில் தொடர்புடைய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.