குமாஸ்தா கொலை வழக்கில் 2பேர் கைது

தூத்துக்குடியில் குமாஸ்தா கொலை வழக்கில் 2பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2024-05-11 14:20 GMT

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்

தூத்துக்குடி மட்டக்கடை பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் மகன் பால்ராஜ் (50). வக்கீல் குமாஸ்தாவாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை மத்தியபாகம் காவல் நிலையம் அருகே கிரேட் காட்டன் சாலையில் உள்ள ஒரு பேட்டையில் பால்ராஜ் தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற மத்திய பாகம் போலீசார் பால்ராஜின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து சங்கரப்பேரியைச் சேர்ந்த பால்சாமி மகன் ஜெயராம் (27), முத்துகிருஷ்ணா புரத்தைச் சேர்ந்த சங்கரலிங்கம் மகன் கந்த சுப்பிரமணியன் (28) ஆகிய 2பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 முன்னதாக போலீசார் அவர்களை பிடிக்கச் சென்றபோது அவர்கள் தப்பியோட முயன்றதால் கீழே விழுந்து 2பேரும் காயம் அடைந்துள்ளனர். கைது செய்யப்பட்ட 2பேர் மீதும் கஞ்சா வழக்குகள் உள்ளது.

Tags:    

Similar News