கோவில் உண்டியல், வாகனம் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது
கோவில் உண்டியல், வாகனம் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது;
By : King 24x7 Website
Update: 2023-12-08 05:21 GMT
கோவில் உண்டியல் - வாகனம் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது
திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட குடவாசல், காப்பணாமங்கலம் க,மலாபுரம் ,கூத்தாநல்லூர், காவனூர், கொரடாச்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள சிறு கோவில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு அதில் பக்தர்கள் காணிக்கையான உண்டியலில் செலுத்திய பணம் திருடப்பட்டதாகவும் மேலும் இரு சக்கர வாகனங்கள் திருட்டுப் போவதாகவும் வழக்குகள் பதிவாகி வந்தது. தொடர் குற்ற செயலில் ஈடுபட்டு வருபவர்கள் கண்டுபிடித்து சட்ட பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள எஸ்பி உத்தரவின்படி தனிப்படை அமைக்கப்பட்டது. இதில் தீவிர தேடுதல் வேட்டையில் நாகை மாவட்டம் கீழ்வேளூர் தாலுகா வெங்கடாங்கால் கீழத் தெருவை சேர்ந்த அரவிந்தன் என்பவரின் மகன் அஜித்குமார் வயது 24 மற்றும் ஒருவர் இரவு நேரங்களில் உண்டியல்களை உடைத்து அதிலிருந்து பணத்தை திருடுவதும் இரு சக்கர வாகனங்களை திருடி அதனை அண்டை மாநிலமான காரைக்காலில் இருந்து சட்டவிரோதமாக மதுபாட்டில் கடத்தலில் ஈடுபவர்களிடம் விற்பனை செய்துள்ளதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து குற்றவாளிகளிடமிருந்து ஐந்து இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டு அவர்களிடம் தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.