ஓட்டு வீடு இடிந்து விழுந்து 3 பேர் படுகாயம்
சீர்காழி அருகே ஓட்டு வீடு இடிந்து விழுந்து 3 பேர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை - போலீசார் விசாரணை;
By : King 24x7 Website
Update: 2023-12-03 16:54 GMT
சீர்காழி அருகே ஓட்டு வீடு இடிந்து விழுந்து 3 பேர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை - போலீசார் விசாரணை
மயிலாடுதுறை மாவட்டத்தில், கடந்த ஒரு வார காலமாக ,தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் ,சீர்காழி அருகே பெருந்தோட்டம், கிராமத்தை சேர்ந்தவர், ஜமீல்ராஜ்,இவரது ஓட்டு வீடு, மழையில் நனைந்து ,வீடு முழுவதும் மழை நீரில் ஊறி, பாதிப்படைந்திருந்தது. இந்த நிலையில், இன்று வீட்டில் வழக்கம் போல, ஜமீல்ராஜ் அவரது மனைவி கமலாதேவி ,மற்றும் மகள் சுபஸ்ரீ , ஆகியோர் ,வீட்டில் இருந்தனர். அப்போது ,திடீரென ஓட்டு வீடு இடிந்து, உள்ளே விழுந்துள்ளது.இதில் ,வீட்டிலிருந்த மூன்று பேரும், படுகாயம் அடைந்தனர். சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர், ஓடி வந்து வீட்டில் சிக்கி இருந்தவர்களை, மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம், சீர்காழி ,அரசு மருத்துவமனையில், சிகிச்சைகள் சேர்த்தனர். இதுகுறித்து, திருவெண்காடு போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை ,மேற்கொண்டுள்ளனர்.