விழுப்புரம் மாவட்டத்தில் 36 கிலோ குட்கா கடத்தல்: 2 பேர் கைது

விழுப்புரம் மாவட்டத்தில் விற்பனைக்காக 36 கிலோ குட்கா எடுத்துச் சென்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-03-02 13:54 GMT

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா

விழுப்புரம் மாவட்டத்தில் விற்பனைக்காக 36 கிலோ குட்கா எடுத்துச் சென்றவரை போலீசார் கைது செய்தனர். அரகண்டநல்லூர் காவல் நிலையம் ஆய்வாளர் தஷாகுல் ஹமீது, உதவி ஆய்வாளர் ரவி மற்றும் காவலர்கள் தலைமையில் மார்கெட் கமிட்டி எதிரே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது,

அவ்வழியாக வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்காக எடுத்து செல்வது தெரிய வந்தது.

இதனை அடுத்து அவர்களை விசாரணை செய்ததில், திருவண்ணாமலை மாவட்டம், தண்ராம்பட்டு, தென்முடியனூர் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குமார் என்பவரின் மகன் அருண்(24) மற்றும் வீரபாண்டி மன்மதன் கோயில் தெருவை சேர்ந்த தண்டபாணியின் மகன் ரியாஸ்(30) என விசாரணையில் தெரியவந்தது.

இதனை அடுத்து இருவரையும் அரங்கநல்லூர் போலீசார் கைது செய்து சுமார் 36 கிலோ எடை கொண்ட குட்கா மற்றும் கார் பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News