பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது - இருவர் தப்பி ஓட்டம்
பளுகல் அருகே புறவூர் பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது. இருவர் தப்பி ஓட்டம் போலீசார் விசாரணை.
Update: 2024-03-18 10:07 GMT
கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் அருகே புறவூர் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடியதாக போலீசாருக்கு புகார் வந்த வண்ணம் இருந்தது. இந்தநிலையில் புறவூர் பகுதியில் பளுகல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு இடத்தில் சிலர் வட்டமாக அமர்ந்து பணம் வைத்து சீட்டு ஆடி கொண்டிருந்தனர். அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரித்தபோது மணிவிளை பகுதியை சேர்ந்த அனில் குமார், அனி, ராஜேஷ் மற்றும் கேரள மாநிலம் பரிசுவக்கில் பகுதியை சேர்ந்த அசோக் குமார், விஜயன் என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1500 பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரை பார்த்ததும் சீட்டாடிய 2 பேர் தப்பியோடிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.