அருமனை அருகே 5 கடைகளில் மர்ம நபர்கள் கைவரிசை

அருமனை அருகே ஒரே நாளில் தொடர்ந்து 5 கடைகளில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.;

Update: 2024-04-02 14:57 GMT

கொள்ளை நடந்த கடைகள்

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே மஞ்சாலுமூடு வெட்டுவிளை பகுதியை சேர்ந் தவர் வின்சென்ட்.அப்பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல இரவு கடையை பூட்டி விட்டு, காலையில் கடையை திறக்க சென்றார். அப்போது கடையின் பூட்டு உடைக் கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது கடையின் பூட்டை உடைத்த மர்மநபர்கள், கடைக்குள் இருந்த 73 ஆயிரம் ரூபாய் மற்றும் பலசரக்கு பொருட்களையும் திருடி சென்றது தெரியவந்தது.அருமனை அருகே மேல்புறம் பகுதியை சேர்ந்தவர் அப்பு மகள் அனிதா.இவர், அருமனை அருகே மூடோடுபகுதியில் காய்கறி மற்றும் பழக்கடை நடத்தி வருகிறார்.

Advertisement

இந்நிலை யில், இவரது கடையின் பூட்டை உடைத்து, உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த 20 ஆயி ரம் ரூபாய் மற்றும் 50 கிலோ எடை கொண்ட தர்பூசணி பழங்களையும் திருடி சென்றது தெரிய வந்தது.இதேப்போன்று தாணிமூடு, மேல்புறம் பகுதிகளில் உள்ள 3 கடைகளில் ஒரே நாளில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று உள்ளது.

இந்நிலையில், திருட்டு சம்பவங்கள் தொடர்பாக வின்சென்ட் மற்றும் அனிதா ஆகிய இருவரும், அருமனை போலீசில் புகார் செய் தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்ப திவு செய்து, திருட்டு நடந்த. பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News