மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக கூறி 50 லட்ச ரூபாய் மோசடி.
மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக கூறி 50 லட்ச ரூபாய் மோசடி.;
By : King 24x7 Website
Update: 2023-12-31 03:53 GMT

மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக கூறி 50 லட்ச ரூபாய் மோசடி.
கோவை சேர்ந்த கிளமென்ட் என்பவர் ஓமனில் பணியாற்றி வருகிறார். இவரது மகள் வர்ஷினியை மருத்துவக் கல்லூரியில் சேர்க்க முயன்ற நிலையில் இவரை தொடர்பு கொண்ட இர்பின்(எ)பிரபு, செந்தில்குமார்,ஷர்மிளா ஆகியோர் தொடர்பு கொண்டு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி அல்லது கோவை சிங்காநல்லூர் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக கூறி 50 லட்ச ரூபாய் பணத்தை பெற்றுள்ளனர்.பணத்தைக் பெற்றுக் கொண்ட பின் சீட் வாங்கி தராமல் காலம் தாழ்த்தியதால் கிளமென்ட் பணத்தை திருப்பித் தர கேட்டுள்ளார்.அவர்கள் பணம் தர மறுக்கவே தான் ஏமாற்றபட்டதை அறிந்தவர் இதுகுறித்து பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த பீளமேடு போலீசார் மூவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.