கஞ்சா விற்பனை - 6 பேர் கைது, 26 கிலோ கஞ்சா பறிமுதல்
சென்னையில் பல்வேறு இடங்களில் நடந்த சோதனையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 26 கிலோ கஞ்சா மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
அண்ணா நகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் பெரம்பூர் இரயில்நிலையம் அருகில் உள்ள இடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, அங்கு சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த சுமன், வியாசர்பாடி, கார்த்திக், கொங்கையூர், ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 13.5 கிலோ கிராம் கஞ்சா மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவல்லிகேணி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் மூர்மார்கெட், பெரியமேடு அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த டிபியா பாஸ்ட்ரே, ஓடிசா மாநிலம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 5.5 கிலோ கிராம் கஞ்சா மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
அயனாவரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் அயனாவரம், தாகூர் நகர், 3வது தெரு, அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த அருண், அயனாவரம், என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1.100 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் அருண் என்பவர் மீது போதைபொருள் மற்றும் அடிதடி உட்பட 6 வழக்குகள் உள்ளது தெரியவந்தது.
ஏழுகிணறு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் வால்டாக்ஸ் ரோடு, அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த விக்னேஷ்வரன், போடிநாயக்கனுார், தேனி மாவட்டம் ,ரமேஷ், போடிநாயக்கனுார், தேனி மாவட்டம் ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5.9 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி கைது செய்யப்பட்ட 6 நபர்களும், விசாரணைக்குப் பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.