கிரைண்டர் செயலி மூலம் ஆசை வார்த்தை கூறி வாலிபரை வரவழைத்து பணம் மோசடி - 9 பேர் கைது !!

Update: 2024-09-30 10:00 GMT

 கைது

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சுரண்டையில் கிரைண்டர் செயலி மூலம் வாலிபரை மிரட்டி பணம் பறித்த 9பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். கடந்த சில மாதங்களாக கிரைண்டர் என்ற செயலி மூலம் பணத்தை பறிகொடுக்கும் இளைஞர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர் கிரைண்டர் செயலியில் இணைந்துள்ள நிலையில் அந்த நபரை ஆசை வார்த்தை கூறி நேற்று முன்தினம் சுரண்டை அருகே அனுமன் நதிக்கரை அருகில் உளள காட்டுப்பகுதிக்கு வரவழைத்துள்ளனர்.அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை வீடியோ எடுத்து தாக்கி செல்போன் மற்றும் பணத்தை பறிமுதல் செய்ததாகவும் வெளியே சொன்னால் வீடியோ வெளியிட்டு விடுவோம் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அந்த நபர் சுரண்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

புகாரை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் உத்தரவின் பேரிலும், ஆலங்குளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெயபால் பர்ணபாஸ் ஆலோசனையின் படி சுரண்டை காவல் ஆய்வாளர் செந்தில், எஸ்.ஐ.கற்பகராஜ் தலைமையில் தென்காசி மாவட்ட சிறப்பு தனிப்படை காவலர்கள், ஆலங்குளம் கோட்ட சிறப்பு தனிப்படை காவலர்கள் என விசாரித்த போது விசாரணையில் மொத்தம் 10 பேர் இந்த குற்ற செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. அந்த பகுதியில் உள்ள செல்போன் கேமராவில் பதிவானவர்கள் விவரங்களை வைத்து குற்றவாளிகளை ஒவ்வொருவராக கைது செய்தனர்.

10 நபர்களில் சுரண்டையைச்சேர்ந்த அரவிந்த் (25), ராமர் (19), மணிகண்டன் (18), மதியழகன் (20), மலரவன் (19), அழகு சுந்தரம் (19), முத்துக்குமார் (19), குற்றாலம் அருகே உள்ள மேலகரம் பகுதியைச் சேர்ந்த சுடலை மகாராஜா (21), வீ.கே.புதூர் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி (25) ஆகிய 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் ஒருவரை போலிசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News