பாபநாசம் அருகே சரக்கு லாரி மோதி வாலிபர் படுகாயம்

பாபநாசம் அருகே சரக்கு லாரி மோதி மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் படுகாயம் அடைந்தார்.

Update: 2024-05-16 10:44 GMT

விபத்தை ஏற்படுத்திய லாரி

பாபநாசம் அருகே ராஜகிரி மெயின் ரோட்டில் கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சென்ற சரக்கு லாரி அதிவேகமாக வந்து எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த ராஜகிரி நாயக்கர் தெருவை சேர்ந்த யுவராஜா 33 என்பவர் மீது மோதியது. இதில் யுவராஜா இடது காலில் பலத்த அடிப்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது.

உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார் இது குறித்து பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் சப் இன்ஸ்பெக்டர் ஜெகஜீவன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

Similar News