சிறுமியை கர்ப்பமாக்கியவர் மீது வழக்கு பதிவு
சிறுமியை கர்ப்பமாக்கியவர் மீது வழக்கு பதிவு செய்து அனைத்து மகளிர் போலீசார் விசாரணை;
By : King 24x7 Website
Update: 2023-12-11 17:14 GMT
சிறுமியை கர்ப்பமாக்கியவர் மீது வழக்கு பதிவு செய்து அனைத்து மகளிர் போலீசார் விசாரணை
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே வி.புதுக்குளத்தைச் சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் மகன் பெரிய கருப்பன்(29). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதல் திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்ததில் அவர் 8 மாதம் கர்ப்பமாகி உள்ளார். இச்சம்பவம் குறித்து அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் மானாமதுரை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்