தக்கலை அருகே பைக்கில் சென்ற ஆசிரியரை தாக்கியவர் மீது வழக்கு
தக்கலை அருகே முன் விரோதம் காரணமாக ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-27 16:16 GMT
காவல் நிலையம்
தக்கலை அருகே உள்ள சாரோடு பகுதியை சேர்ந்தவர் ரகு ராமன்.அரசு பள்ளி ஆசிரியர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்தடென்னிகுமார் என்பவருக்கும் சொத்து எல்கை பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.சம்பவத்தன்று இரவு 8 மணிக்குரகுராமன் மோட்டார் சைக்கிளில் வீட்டிலிருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த டென்னிகுமார் அவரை தடுத்து நிறுத்தி தகாத வார்தையால் பேசியதோடு கையால் கன்னத் தில் தாக்கிவிட்டு தப்பிச் சென்றார். இதில் படுகாயமடைந்த ரகுராமனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தக் கலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுகுறித்து ஆசிரியர் ரகுராமன் கொடுத்த புகாரின்பேரில் டென்னிகுமார் மீது தக்கலை போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.