இளம்பெண்ணிடம் பணம் மோசடி செய்த பிரபல யூடியூபர் மீது பலாத்காரம் புகார் !

Update: 2024-09-27 11:04 GMT
இளம்பெண்ணிடம் பணம் மோசடி செய்த பிரபல யூடியூபர் மீது பலாத்காரம் புகார் !

ஹர்ஷா சாய்

  • whatsapp icon
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

காதலித்து திருமணம் செய்வதாக கூறி ரூ.2 கோடி மோசடி செய்ததாகவும், பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் பிரபல யூடியூபர் மீது இளம்பெண் போலீசில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல யூடியூபர் ஹர்ஷா சாய். இவர் ஏழ்மை குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்கு தெரியாமல் திடீரென பணம் கட்டு கட்டாக கொண்டு சென்று பணத்தை வழங்கி அவர்கள் மகிழ்ச்சியை வீடியோவாக எடுத்து யூடியூப்பில் பதிவு செய்து அதன் மூலம் அதிக வருமானம் பெற்று மிகவும் பிரபலமானார்.

இந்நிலையில் ஹர்ஷா சாய் திடீரென்று யூடியூப்-ற்கு வருவதை நிறுத்திவிட்டார். காரணம் இந்த புகழைப் பணமாக்கிக் கொண்டு சினிமாவில் நடிக்க தொடங்கினார். இந்நிலையில் அவர் மீது பெண் ஒருவர் அளித்த வாக்குமூலத்தில் தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி, ஹர்ஷா சாய் தன்னிடம் இருந்து ரூ.2 கோடி பணம் பெற்றுக்கொண்டு தன்னை பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றி விட்டதாக இளம்பெண் குற்றம் சாட்டினார். தற்போது அந்த இளம்பெண்ணின் விவரங்களை போலீசார் ரகசியமாக வைத்துள்ளனர்.

மேலும் போலீசார் அந்த பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு ' மீது தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நார்சிங்கி காவல் நிலையத்தில் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News