தாராபுரம் பேருந்து நிலையத்தில் திடீர் தீ விபத்து

தாராபுரம் பேருந்து நிலையத்தில் பின்புறத்தில் பேக்கரி மற்றும் செல்போன் கடைகளில் திடீர் தீ விபத்து 20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது.

Update: 2024-03-03 15:05 GMT

தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் 

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பேருந்து நிலையத்தில் 100,க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன இன்று அதிகாலை பேருந்தின் வடக்கு புறமாக திருச்சி கரூர் பழனி செல்லும் பேருந்துகள் நிற்கும் இடத்தின் பின்புறத்தில் பேக்கரி கடை நடத்தி வருபவர்கள் பாலகிருஷ்ணன், பாலாமணி, ராமசாமி,கிஷோர் குமார், அதேபோல செல்போன் கடை நடத்தி வருபவர் தஸ்லிம்,இளங்கோ, ஆகியோர். நேற்று இரவு 10,மணிக்கு கடைகளை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றனர்.

பிறகு பேக்கரி கடை நடத்துபவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கடைகளை திறக்க வந்தனர். அப்போது அடைக்கப்பட்ட கடைகளின் ஷட்டரில் இருந்து கரும்புகை வந்து கொண்டிருந்தது இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கடை உரிமையாளர் தாராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான 10,க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அதற்குள் மூன்று பேக்கரி இரண்டு செல்போன் கடை ஆகியவற்றில் தீ, பிடித்து மல மல வென எரிந்தது அதிலிருந்த பொருட்கள் தீயில் கருகி நாசமானது. கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் தீயணைப்பு வீரர்கள் தீயை அனைப்பதற்கு பெரும் சிரம்மடைந்தனர். அதன் பிறகு கடை உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மீதம் இருந்த நான்கு கடை செட்டர்கள் உடைக்கப்பட்டு அதில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயினை தீயணைப்பு வீரர்கள் அனைத்தனர்.

ஒரு மணி நேரம் போராடி தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் பேக்கரி மற்றும் செல்போன் கடைகளில் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போன் மற்றும் செல்போன் உதிரி பாகங்கள் மற்றும் பேக்கரியில் இருந்த குளிர்சாதனப்பெட்டி, பேன், ஏர்குலர், டிவி உள்ளிட்ட எலக்ட்ரிக் சாதனங்கள் மற்றும் குளிர்பானங்கள் தின்பண்டங்கள் உள்ளிட்டவை தீயில் கருகி நாசமானது.

இந்த திடீர் தீ விபத்தால் 20, லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகி நாசமானது தீ' விபத்திற்கு மின் கசிவு காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணமா என தாராபுரம் போலீசார் தீ விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News