பளுகலில் கால்வாயில் மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர்

பளுகலில் கால்வாயில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த வாலிபரின் சடலத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.;

Update: 2024-06-18 08:47 GMT

காவல் நிலையம்

பளுகல் அருகே உள்ள அயனிகூண்டு பகுதியை சேர்ந்தவர் இயேசுதாஸ். இவரது மகன் சைன்ஜோன்.கூலி தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கமும் இருந்து வந்தது. திருமணமாகவில்லை. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற சைன்ஜோன் மீண்டும் திரும்பி வரவில்லை.

இதனால் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். பளு கல் காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தனர்.இந்த நிலையில் நேற்று பளுகல் அருகே உள்ள கூடலூர்கோணம் பகுதியில் உள்ள குளத்தின் அருகே உள்ள கால்வாயில் வாலிபர் ஒருவர் தலைகுப் புற நிலையில் சடலமாக கிடப்பதாக பளுகல் காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது.

Advertisement

இதையடுத்து போலீ சார் சென்று விசாரித்த போது இறந்து கிடந்ததுசைன் ஜோன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்களும் சம்பவ இடத்துக்கு வந்து இறந்து கிடந்தது சைன் ஜோன் என்பதை உறுதிப்படுத்தினர்.

அவர் தவறி விழுந்து அடிபட்டு இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து அவரது தாயார் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News