ஓட்டலுக்கு சாப்பிடச் சென்ற வாலிபர் நாய் துரத்தியதால் - 3-வது மாடியில் இருந்து குதித்ததில் பரிதாபமாக உயிரிழப்பு !!

Update: 2024-10-22 11:30 GMT

 பலி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஓட்டலுக்கு நண்பர்களுடன் சாப்பிடச் சென்ற வாலிபரை, நாய் துரத்தியதால், 3-வது மாடியில் இருந்து குதித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆந்திர மாநிலம் தெனாலியை சேர்ந்தவர் உதய் (23) இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இரவு, தனது நண்பர்களுடன் சந்தாநகர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். நண்பர்கள் அனைவரும் அந்த ஓட்டலின் 3-வது மாடிக்கு (ரூஃப் கார்டன்) சாப்பிட சென்றனர். அப்போது, அங்கிருந்த நாய் ஒன்று, வாலிபர் உதய்யை பார்த்ததும் துரத்தியது.

Advertisement

உதய் நாய் துரத்தி வருவதை பார்த்து பயந்து போய் ஓட்டலின் பால்கனியில் ஓடியுள்ளார். அப்போது உடனே அங்குள்ள ஒரு ஜன்னலை திறந்து, அதன் வழியாக கீழே குதித்துள்ளார். ஆனால், அது 3-வது மாடி என்பதால், நேராக சாலையில் விழுந்து உதய், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆனால், இந்த விவகாரத்தை ஓட்டல் நிர்வாகம் மறைத்து விட்டது. நேற்று உயிரிழந்த உதய்யின் நண்பர்கள் தெரிவித்த தகவலால் இந்த உண்மை வெளிவந்துள்ளது. போலீஸார் வழக்கு பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News