பாலியல் வன்கொடுமையால் நடைப்பிணமாக வாழ்கிறேன்” - உச்சநீதிமன்றத்தை ஆட்டம் காண வைத்த பெண் நீதிபதி

உத்தரபிரதேச மாநிலத்தின் பெண் நீதிபதி ஒருவர், சக மாவட்ட நீதிபதியால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதால் தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்குமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி அதிர்ச்சி அளித்துள்ளார்.

Update: 2023-12-16 12:31 GMT

Women judge

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தலைநகர் டெல்லியில் தொடங்கி கடைக்கோடியில் இருக்கும் கிராமம் வரை தினமும் ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் சீண்டல்களுக்கும், துண்புறுத்தலுக்கும் ஆளாவது தொடர்கதையாக நடந்துக் கொண்டிருக்கிறது. 60 நொடிகளுக்கு ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறாள் என்பது புள்ளி விவர கணக்காக உள்ளது. 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மணிப்பூரில் இரு பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல் நாடெங்கும் கொதிப்பை ஏற்படுத்தியது. அப்போது நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு அளித்த புள்ளி விவரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ராஜஸ்தான், பீகார், மேற்கு வங்கம் மாநிலங்களில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளன. குறிப்பாக உத்தரபிரதேசத்தில் 56,083 வழக்குகளும், ராஜஸ்தானில் 40,738 வழக்குகளும், மகாராஷ்டிராவில் 39,526 வழக்குகளும், லடாக்கில் 18 வழக்குகளும், லட்சத்தீவுகளில் 9 பாலியல் வன்கொடுமை வழக்குகளும் பதிவாகியுள்ளன. இவை அரசின் பார்வைக்கு வந்த புள்ளி விவரங்கள் மட்டுமே. 

இன்னும் அரசின் பார்வைக்கு வராத எத்தனையோ பாலியல் சீண்டல்கள் மறைந்து கிடக்கின்றன. வீட்டில் தொடங்கி, வேலை செய்யும் இடம், கல்வி நிறுவனங்கள் என ஒவ்வொரு இடங்களிலும் பெண்கள் சீண்டலுக்கு ஆளாகின்றனர். சிறு குழந்தைகளில் தொடங்கி, பள்ளி, கல்லூரி மாணவிகள், வேலை செய்யும் பெண்கள், குடும்ப பெண்கள் என நீண்டுக் கொண்டு செல்லும் இந்த பட்டியலில் குற்றத்திற்கு நீதி வழங்கும் பெண் நீதிபதியே பாலியல் சீண்டலுக்கு ஆளானது அதிர்ச்சிக்கும் மேல் அதிர்ச்சியாய் உள்ளது. 

நேற்று உத்தரபிரதேசத்தை சேர்ந்த நீதிபதி ஒருவர் பாலியல் தொல்லைக்கு ஆளானதால் நடைபிணமாக வாழ்கிறேன், கண்ணியமான தற்கொலைக்கு அனுமதி தாங்கள் என கெஞ்சியது சட்டத்தின் மீது ஆயிரம் கேள்விகளை எழுப்பியுள்ளது. 

உத்தரபிரதேச மாநிலம் பாண்டா மாவட்டம் பாரபங்கியில் உள்ள நீதிமன்றத்தில் பெண் நீதிபதி ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். இவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டிற்கு 2 பக்க கடிதம் எழுதியுள்ள்ஆர். அதில், ” நடைப்பிணமாக வாழும் என் வாழ்க்கையை முடித்து கொள்ள அனுமதி தாருங்கள் என கேட்டுள்ளார். 

நீதிபதியின் கடித்ததில், “மிகுந்த மன வேதனையிலும், விரக்தியிலும் இந்த கடிதத்தை எழுதுகிறேன். என் வாழ்க்கையை முடித்துக் கொள்ள நீங்கள் அனுமதிக்க வேண்டும். நான் மிகுந்த ஆர்வத்துடன், சாதாரண மக்களுக்கு நீதி வழங்க வேண்டும் என ஆசைப்பட்டு நீதித்துறையில் சேர்ந்தேன். ஆனால், ஒரு திறந்த நீதிமன்றத்தில் வைத்து நான் அவமானப்படுத்தப்பட்டேன். ஒரு பூச்சியை விட என்னை மோசமாக நடத்தினார்கள். 

இந்தியாவில் உள்ள அனைத்து பெண்களுக்கும் இதை சொல்லிக் கொள்கிறேன். இந்திய சட்டத்தில் உள்ள பாலியல் வன்கொடுமை தடை சட்டம் என்பது சுத்தமான பொய். ஒருவர் மீது நீங்கள் புகார் கொடுத்தால், சித்ரவதை செய்யப்படுவீர்கள். உங்களுக்கு ஆதரவாக யாரும் குரல்கொடுக்க மாட்டார்கள். ஒரு குறிப்பிட்ட மாவட்ட நீதிபதி மற்றும் அவரை சார்ந்தவர்களால் நான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டேன். அந்த மாவட்ட நீதிபதி இரவில் என்னை வரது வீட்டு வர சொல்லி வற்புறுத்தினார். 

இது தொடர்பாக 2022ம் ஆண்டு அலகாபாத் தலைமை நீதிதியிடம் புகார் அளித்தேன். எந்த நடவடிக்கையும் இல்லை. 2023ம் ஆண்டு ஜூலை மாதம் உயர்நீதிமன்றத்திலும் புகார் அளித்தேன். 1000 மின்னஞ்சல்கள் அனுப்பினேன். அதன் மீதான விசாரணையை எடுக்க 6 மாதம் எடுத்துக் கொண்டனர். அந்த விசாரணையும் கேலி கூத்தாக முடிந்தது. விசாரணையில் கொண்டுவரப்பட சாட்சிகள் அந்த மாவட்ட நீதியிடம் வேலைசெய்யும் பணியாளர்கள். அப்படி இருக்கும்போது எனக்கு எப்படி நியாயம் கிஐக்கும். 

எனது குரலுக்கு உச்சநீதிமன்றம் செவிசாய்க்கும் என நினைத்து ரிட் மனு தாக்கல் செய்தேன். அதுவும் ஒரே வாரத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கு மேல் எங்கு சென்று போராடுவது. நான் நம்பிக்கையை இழந்துள்ளேன். இந்த நிலைமையில் நான் எப்படி மற்றவர்களுக்கு நீதி வழச்ங்க முடியும். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நான் நடைப்பிணமாகவே வாழ்கிறேன். என் உயிர், கண்ணியம் எல்லாம் போனதாக உணர்கிறேன்.

ஆன்மா இல்லாத உடலை சுமந்து இருப்பதில் எந்த நோக்கமும் இல்லை. என் வாழ்க்கையை கண்ணியமான முறையில் முடிக்க தயவு செய்து அனுமதி தாருங்கள்” என கேட்டுள்ளார். பெண் நீதிபதியின் இந்த கடிதம் உச்சநீதிமன்றத்தை ஆட்டம் காண வைத்துள்ளது. கடிதம் சமூக வலைதளங்களிலும், ஊடகத்திலும் வெளியான நிலையில், உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

பெண் நீதிபதி அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணை அறிக்கையை வழங்குமாறு அலகாபாத் உயர்நீதிமன்றத்திடம், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News