ஆக்டிவா வாகனத் திருட்டு - வடமாநில இளைஞர் கைது.
வீட்டின் முன் சாவியுடன் நிறுத்தியிருந்த வாகனம் திருட்டு சம்பவத்தில் வடமாநில இளைஞர் கைது
By : King 24x7 Website
Update: 2024-02-15 17:23 GMT
திருச்செங்கோட்டில் தொடர் வாகன திருட்டு சம்பவங்கள் நடந்து வந்ததால் திருச்செங்கோடு நகர காவல் துறை ஆய்வாளர் மகேந்திரன் தலைமையில் துணை ஆய்வாளர் உதயகுமார் தலைமையில் போலீஸ் படை அமைக்கப்பட்டு தேர்தல் வேட்டை தீவிர படுத்தப்பட்டது.திருச்செங்கோடு தொண்டிக்கரடு மாங்குட்டைபாளையம் பகுதியில் செந்தில்குமார் என்பவரது நேற்று வீட்டின் முன் சாவியுடன் நிறுத்தப் பட்டிருந்த அவரது ஆக்டிவா வாகனத்தைதிருடிச் சென்ற நபரை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வந்தனர்.இதனை தொடர்ந்து கைலாசம்பாளையம் பகுதியில் போலீசார் துணை ஆய்வாளர் உதயகுமார் தலைமையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கிடமான வகையில் ஆக்டிவா வாகனத்தில் வந்த சத்தீஸ்கர் மாநிலம் பஸ்பராலா மாவட்டம் பகுதியைச் சேர்ந்த சம்பத் பெராட்டி என்பவரது மகன் பெலன் பெராட்டி என்பவரை பிடித்து விசாரித்த போது அவர் வைத்திருந்த வாகனம் நேற்று வீட்டின் முன்நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருடி சென்ற ஆக்டிவா என்பதும்சிசிடிவி கேமராவில் தெரிபவர் இவர்தான் என்பதும் தெரியவந்தது.இவரைப் பிடித்து விசாரித்த போது ரிக் வேலை செய்வதற்காக சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து திருச்செங்கோடு வந்ததாகவும் வேலை பிடிக்காததால் ஊருக்கு செல்ல பணம் இல்லாமல் தவிக்க வந்ததாகவும் கையில் இருந்த பணத்தை குடித்து தீர்த்து விட்டதால் என்ன செய்வது என தடுமாறிய நிலையில் சாவியுடன் வாகனம் நின்றதால் அதனை எடுத்து விற்றுவிட்டு சென்றுவிடலாம் என முடிவு செய்திருந்ததாகவும் காலையில் போலீசார் தன்னை பிடித்து விட்டதாகவும் கூறினார் அவரை கைது செய்த போலீசார் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்