நடிகர் சல்மான் கான் கொலைமிரட்டல் வழக்கு - கைதானவர் அளித்த வாக்குமூலம் !!
பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல் வந்த நிலையில் இதனால் சல்மான் கான் எப்போதும் பலத்த பாதுகாப்புடனே வெளியில் செல்லவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
இரண்டு நாள்களுக்கு முன்பு சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார். பிகா ராம் பிஷ்னோய் என்ற அந்த நபர் ரூ.5 கோடி கொடுக்கவேண்டும் என்று கேட்டு சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்திருந்தார். பிகாராமிடம் மும்பை போலீஸார் விசாரணை நடத்திய போது கொலை மிரட்டல் விடுத்ததற்காக கவலை ஏதும் இல்லாமல் அதோடு பிஷ்னோய் சமுதாயத்திற்காக சிறைக்கு செல்ல தயாராகவே இருந்ததாக அந்த நபர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
போலீஸாரின் விசாரணையில் லாரன்ஸ் பிஷ்னோய் எங்களது கடவுள் போன்றவர் என்றும், பிஷ்னோய் சமுதாயத்திற்கு ஒரு கோயில் கட்டுவதற்காகத்தான் சல்மான் கானிடம் ரூ.5 கோடி கேட்டேன் என்று விசாரனையில் தெரிவித்துள்ளார்.
அதோடு அடிக்கடி லாரன்ஸ் பிஷ்னோய் வீடியோ பார்த்து அதனால் கவரப்பட்டுள்ளார். விசாரணையில் லாரன்ஸ் பிஷ்னோய் செயல்களை நியாயப்படுத்தியுள்ள பிகாராம், நடிகர் சல்மான் கானின் முந்தைய செயல்களையும் குறிப்பிட்டுள்ளார்.
சல்மான் கான் இதற்கு முன்பு கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய விவகாரத்திலோ அல்லது மான்களை வேட்டையாடியதிலோ இது வரை மன்னிப்பு கேட்கவில்லை என்றும், லாரன்ஸ் பிஷ்னோயிக்காக தான் சிறைக்கு செல்ல தயாராக இருப்பதாகவும் போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அச்சுறுத்தல் வந்து கொண்டிருப்பதால் சல்மான் கானுக்கு நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவர் தற்போது சிகந்தர் படப்பிடிப்புக்காக ஐதராபாத்தில் உள்ளார். அவருக்கு சல்மான் கானின் தனி பாதுகாவலர்கள், மும்பை போலீஸார், ஐதராபாத் போலீஸார் மற்றும் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர். சல்மான் கான் சொந்தமாக 50 முதல் 70 பேர் கொண்ட பாதுகாவலர்களையும் அழைத்துச் சென்றுள்ளார். படப்பிடிப்பில் பங்கேற்கும் அனைவரும் தினமும் முழுமையாக சோதிக்கப்பட்டு அடையாள அட்டை சரிபார்க்கப்பட்ட பிறகே உள்ளே அனுப்பப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.