தஞ்சை அருகே அதிமுக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மகனுக்கு கத்தி குத்து

அதிமுக ஊராட்சி மன்ற துணைத் தலைவரும் தஞ்சை கிழக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் மகனை கத்தி யால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-04-29 10:12 GMT

கத்திக் குத்தில் காயமடைந்த வாலிபர்

கும்பகோணம் அருகே நாச்சியார்கோயில் காவல் சரகம் மாத்தூர் பகுதியில் இன்று மாலை இளைஞர்கள் சிலர் கிரிகெட் விளையாடிக் கொண்டிருந்தனர் அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி ஏற்பட்ட தகராறாக மாறிய நிலையில் அதனை தடுக்க முயன்ற, விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களின் ஒருவரான பொறியியல் கல்லூரி மாணவர் சாம்சன்ராஜ் (22) விலக சென்ற போது, கஞ்சா போதையில் இருந்த சுரேந்திரன் என்பவர் தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து யாரும் எதிர்பாரா வேளையில்,

சாம்சன்ராஜ் நெஞ்சில் குத்த முயன்ற போது, அதனை கண்டு சுதாரித்த சாம்சன்ராஜ் தனது இடது கையால் தடுத்த போது, கையில் பலத்த கத்தி குத்து காயம் ஏற்பட்டது உடனடியாக அவர் கும்பகோணம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார், இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து நாச்சியார்கோயில் போலீசார் வழக்கு பதிவு செய்து கஞ்சா போதை இளைஞரான சுரேந்தரை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . சமீப நாட்களாக நாச்சியார்கோயில் பகுதியில் கஞ்சா விற்பனை மற்றும் பயன்பாடு அதிகரித்துள்ளது என பொது மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்,

கத்து குத்துபட்ட சாம்சான்ராஜின் தந்தை மாத்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும், தற்போதைய துணை தலைவருமான சார்லஸ் (அதிமுக) ஆவார். அதிமுக நிர்வாகி மகன் கத்து குத்து பட்டது குறித்து தகவல் அறிந்த திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய செயலாளர் முத்து கிருஷ்ணன், மாநில அம்மா பேரவை இணை செயலாளர் ஏவிகே அசோக்குமார், கும்பகோணம் முன்னாள் எம்எல்ஏ இராம இராமநாதன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலரும் சாம்சன்ராஜை மருத்துவமனைக்கு வந்து சந்தித்து ஆறுதல் கூறினர் .

Tags:    

Similar News