மார்த்தாண்டம் அருகே மர்மமான முறையில் உயிரிழந்த முதியவர்
மார்த்தாண்டம் அருகே வீட்டில் வாயில் நுரை தள்ளிய நிலையில் முதியவர் மர்மமாக உயிரிழந்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-02 15:13 GMT
காவல் நிலையம்
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே காஞ்சிரரோடு சாங்கை பகுதியை சேர்ந்தவர் எபனேசர்.இவருக்கு குடிப் பழக்கம் இருந்து வந்தது.இந்த நிலையில் இரவு தூங்கச் சென்றவர் மறுநாள் காலை எழும்பவில்லை.வீட்டில் உள்ளவர்கள் சென்று பார்த்த போது வாயில் இருந்து நுரை வந்த வண்ணம் சுயநினைவு இல்லாமல் காணப்பட்டார்.
உடனே குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், எபனேசர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக மனைவி கிறிஸ்டல் குளோரி, மார்த்தாண் டம் போலீசில் புகார் கூறினார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.