ஜெயங்கொண்டம் அருகே முன்விரோதத்தில் தகராறு:போலீசார் வழக்கு பதிவு
ஜெயங்கொண்டம் அருகே இடம் தகராறில் இரண்டு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-18 11:00 GMT
காவல் துறையினர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கோரியம்பட்டி மெயின் ரோட்டுத் தெருவை சேர்ந்த முருகேசன். இவரது மகன் பழனிவேல் (51) என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் சக்திவேலு என்பவருக்கும் இடத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சக்திவேல் மற்றும் அவரது உறவினர் நீலமேகம் உள்ளிட்டோர் சேர்ந்து பழனிவேலுவையும் அவரது மனைவியையும் திட்டி தாக்கியுள்ளனர்.இதில் பழனிவேல் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பழனிவேல் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் சக்திவேல், நீலமேகம் ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.