விசைப்படகில் இறந்து கிடந்த அசாம் வாலிபர்
இரையுமன்துறை மீன்பிடி தங்கு தளத்தில் விசைப்படகு இறந்து கிடந்த அசாம் வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.;
இறந்து கிடக்கும் அசாம் வாலிபர்
கன்னியாகுமரி மாவட்டம் ரவிபுத்தன்துறை பகுதியை சேர்ந்தவர் டோனி ரேமண்ட்.இவருக்கு சொந்தமான விசைப்படகில் அசாம் மாநில த்தைச் சேர்ந்த பிரகாஷ் கோகை என்பவர் உட்பட 5 பேர் மீன்பிடி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர்.
நேற்று முன்தினம் மாலை படகின் உரிமையாளர் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஐந்து பேருக்கும் சம்பளத்தை கொடுத்து விட்டு சொந்த ஊர் சென்று வருமாறு கூறியுள்ளார்.அன்றைய தினம் இரண்டு பேர் சொந்த ஊர் திரும்பினர்.மூன்று பேர் மது அருந்திவிட்டு மீன்பிடி தங்கு தளத்தில் நின்ற மற்றொரு விசைபடகில் தூங்கி உள்ளனர். நேற்று படகில் இருந்த இருவர் ஊருக்கு சென்ற நிலையில் பிரகாஷ் கோகை உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடம் சென்ற போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து நித்திரவிளை போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்