போலீஸ் ஏட்டு மீது தாக்குதல் செய்த 6 பேரிடம் விசாரணை
சம்பவம் செய்துவிடுவோம் என மிரட்டல் விடுத்து போலீஸ் ஏட்டு மீது தாக்குதல் செய்த 6 பேரிடம் விசாரணை
By : King 24x7 Website
Update: 2023-12-18 03:08 GMT
கன்னங்குறிச்சி நுண்ணறிவு பிரிவு ஏட்டாக பணிபுரிந்து வருபவர் பூபதி. இவர் நேற்று மாலை அடிவாரம் சென்று கொண்டிருந்தார். அப்போது இளைஞா்கள் சிலா் நடுரோட்டில் காரை நிறுத்தி போட்டோ எடுத்து கொண்டு இருந்தனர். நுண்ணறிவு பிரிவு ஏட்டு அவர்களை பொதுமக்களுக்கு இடையூறு செய்யக்கூடாது. அங்கிருந்து புறப்பட்டு செல்லுங்கள் என கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை சேர்ந்த சதாம்உசேன் (25) மற்றும் அவரது நண்பர்கள் அடையாள அட்டையை காட்டுமாறு கூறி பூபதியை மிரட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் நுண்ணறிவு பிரிவு ஏட்டு மற்றும் ரோந்து வாகனத்தில் வந்தவர்களை சதாம்உசேன் மற்றும் அவரது நண்பர்கள் சம்பவம் செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பூபதி கன்னங்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், சதாம்உசேன் உள்ளிட்ட 6 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.