முக்கூட்டுகலில் பெண் மீது தாக்குதல்: முன்னாள் ராணுவ வீரர் மீது வழக்கு
முக்கூட்டுகல் பகுதியில் பெண்ணை சரமாரியாக தாக்கி மிரட்டல் விடுத்த முன்னாள் ராணுவ வீரர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-26 10:51 GMT
காயமடைந்த பெண்
முக்கூட்டுக்கல் குருவில்விளை பகுதியை சேர்ந்தவர் கவிதா.சம்பவத்தன்று முக்கூட்டுக்கல் நியாயவிலை கடைக்கு இருச்சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் தினேஷ்குமார் என்பவர் கவிதாவை தகாத வார்த்தைகள் பேசி, அவரது இருச்சக்கர வாகனத்தை மிதித்து கீழே தள்ளி உள்ளார்.
அந்த நேரத்தில் தேர்தல் பறக்கும் படையினர் அப்பகுதியில் வருவதை பார்த்த தினேஷ் குமார் ஓடிவிட்டார். பறக்கும் படையினர் கவிதாவை மீட்டு அருமனை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து உயர் சிகிச் சைக்காக தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து அருமனை போலீசார் விசாரித்து வரு கின்றனர்.