திருவட்டார் அருகே தூங்கியவர்கள் மீது ஆசிட் வீசிய ஆட்டோ ஓட்டுனர்

திருவட்டார் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஆசிட் வீசிய ஆட்டோ ஓட்டுனருக்கு போலீஸ் வலை வீசி தேடி வருகிறார்கள்.;

Update: 2024-04-27 14:03 GMT

காவல் நிலையம்

திருவட்டார் அருகே வீயன்னூர் தொழிச்சல் பிலாவிளை பகுதியை சேர்ந்தவர் செல்வ ராஜ். இவரது மனைவி ஸ்டெல்லா பாய். இவர்களுக்கு அபிதா என்ற மகள் உள்ளார். செல்வராஜ் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.அதன் பிறகு குட்டக்குழி புதுக்காடு வெட்டிவிளையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜாண் கிறிஸ்டோபர் ஸ்டெல்லா பாய்க்கு சிறுசிறு உதவி கள் செய்து வந்து உள்ளார்.

இந்நிலையில், சமீ பத்தில் அபிதாவுக்கு குட்டக்குழி வெட் டுக்காட்டு விளையை சேர்ந்த எலக்ட்ரீஷியன் அஜின் என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் மகளும், மருமகனும் ஸ்டெல்லா பாயின் வீட்டிலேயே ஒன்றாக வசித்து வருகின்றனர்இதனால் ஸ்டெல்லா பாய், ஜாண் கிறிஸ்டோபருடனான பழக்கத்தை குறைத்துக்கொண்டார். இது அவருக்கு பிடிக்க வில்லை.

Advertisement

இதனால் ஆத்திரம் அடைந்த ஜாண் கிறிஸ்டோபர் இரவு வீட்டின் ஜன்னலை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்த அஜின் மீது ஆசிட் வீசி உள்ளார். அவரது அல றல் சப்தம் கேட்டு ஓடி வந்த ஸ்டெல்லா பாய் மீதும் ஆசிட்டை வீசி விட்டு தப்பிச் சென்று உள்ளார்.படுகாயம் அடைந்த இருவரையும் அப்பகு தியினர் மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து அஜின் திருவட்டார் ஸ்டேஷ னில் அளித்த புகாரின் பேரில், போலீசார் ஜாண் கிறிஸ்டோபர் மீது வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News