சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தில் பைக் - மினிவேன் மோதல்

சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தில் இருசக்கர வாகனம் மினிவேன் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் முதியவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2024-04-05 11:24 GMT

விபத்துக்குள்ளான பைக்

சோழவந்தான் கோவிந்தம்மாள் தெருவை சேர்ந்த முத்து வயது 50 இன்று மதியம் வாடிப்பட்டி பகுதியில் இருந்து சோழவந்தானுக்கு வந்து கொண்டிருந்தபோது சோழவந்தானிலிருந்து பிஸ்கட் கம்பெனிக்கு சென்ற வேன் மீது நேருக்கு நேர் மோதியதில் படுகாயம் அடைந்தார்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த முத்துவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

Tags:    

Similar News