குலசேகரம் அருகே பைக் - ஸ்கூட்டர் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

குலசேகரம் அருகே மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டர் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்.;

Update: 2024-05-07 10:07 GMT

காவல் நிலையம்

குலசேகரம் அருகே உள்ள கோதையாறு மின்வாரிய குடி யிருப்பைச் சேர்ந்தவர் ஹரி பாலன். இவருடைய மகள் அனுகிரகா.இவர் அஞ்சுகிராமம் அருகே பால்குளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் நீட் தேர்வு எழுதச்சென்றார்.

அவருக்கு துணையாக காட்டாக்கடையை சேர்ந்த ஜான்சி என்பவரும் சென்றார். அனு கிரகா தேர்வு எழுதிவிட்டு ஜான்சியுடன் ஸ்கூட்டரில் வீட்டுக்கு திரும்பிக் கொண் டிருந்தனர்.அவர்கள் குலசேகரம் அருகே வெண்டலிகோடு பகுதியில் வந்து கொண்டிருந்த போது பொன்மனை புல்லத்தூர் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியான ரமேஷ் என்பவர் ஓட்டி வந்தமோட்டார் சைக்கிளும்,அனுகிரகாவின் ஸ்கூட்டரும் மோதிக்கொண்டன.

Advertisement

இதில் 3 பேரும்தூக்கி வீசப் பட்டு படுகாயமடைந்தனர். இதைகண்ட அக்கம் பக்கத்தினர் அனுகிரகா, ஜான்சியை மீட்டு சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயடைந்த ரமேஷை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ரமேஷ் பரிதாபமாகஇறந்தார்.இதுகுறித்து அனுகிரகா கொடுத்த புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News