குலசேகரம் அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதல்:வாலிபர் உயிரிழப்பு

குலசேகரம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.;

Update: 2024-04-25 10:02 GMT
குலசேகரம் அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதல்:வாலிபர் உயிரிழப்பு

காவல் நிலையம்

  • whatsapp icon

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள செம்மன்காலவிளை, பகுதியை சேர்ந்தவர் ஜாய்.தனது இளைய மகன் அனிஷ் என்பவருடன் வசித்து வருகிறார். அனிஷ், மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

அனிஷ் வேலை முடிந்ததும் மாலையில் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது கல்லடிமாமூடு பகுதியில் வந்த போது எதிரே சுபின் என்பவர் ஒட்டி வந்த பைக் அனீஷ் பைக் மீது மோதியது.இதில் அனிஷ் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். அவரை 108 ஆம்புலன்ஸ் குழித்துறை மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் அனீஷ் இறந்து விட்டது தெரிய வந்தது.

இதுகுறித்து அவரது தாயார் ஜாய் கொடுத்த புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் விசாரணை நடத்தி சுபின் மீது இன்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News