வழிபாட்டு தலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - குண்டர் சட்டத்தில் கைது
குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய தேவாலயங்கள், பள்ளிவாசல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பி கைதானவரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.
Update: 2024-02-19 03:49 GMT
கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரை குளம் பகுதியை சேர்ந்தவர் கதிரேஷ் (36). சமீபத்தில் குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய தேவாலயங்கள், பள்ளிவாசல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பி வைத்தார். போலீசார் அவரை கைது செய்தனர். அவர் மீது கன்னியாகுமரி, நாகர்கோவில் உட்பட பல்வேறு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் நாகர்கோவில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிடுமாறு மாவட்ட கண்காணிப்பாளர் சுந்தரவனம் கலெக்டர் ஸ்ரீதருக்கு பரிந்துரை செய்திருந்தார். இதை ஏற்று கதிரேசை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் கதிரேசை கைது செய்யும் நடவடிக்கை எடுபட்டனர். தற்போது கதிரேஷ் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக உள்ளார். பரிசோதனைகள் முடிந்த பின் இவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் மாற்றப்படுவார் என தெரிகிறது.