கருங்கல் அருகே நர்ஸ் வீட்டின் கதவை உடைத்து பணம் திருட்டு
கருங்கல் அருகே நர்ஸ் வீட்டின் கதவை உடைத்து பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-10 09:20 GMT
காவல் நிலையம்
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே கப்பிலார் வட்டவி ளையை சேர்ந்தவர் ஜாண் ஜெஸ்டின்.பர்னிச்சர் கடை ஊழியர். இவரது மனைவி வெளிநாட்டில் நர்சாக உள்ளார்.இவர்களது மகள் நர்சிங் கல்லூரி விடு தியில் தங்கி படித்து வருகிறார். நேற்று இரவு ஜாண் ஜெஸ்டின் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
காலை திரும்பி வந்த போது வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 5 ஆயிரம் பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டு இருந்தது.பீரோ சாவியையும் கொள்ளையன் எடுத்து சென்று விட்டான். இது தொடர்பாக கருங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.