பெல் குடியிருப்பு பகுதியில் அடுத்தடுத்து வீடுகளில் கொள்ளை
பெல் குடியிருப்பு பகுதியில் அடுத்தடுத்து 8 வீடுகளில் நடந்த கொள்ளையில் 20 சவரன் தங்கநகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை;
By : King 24x7 Website
Update: 2023-12-21 08:00 GMT
பெல் குடியிருப்பு பகுதியில் அடுத்தடுத்து 8 வீடுகளில் நடந்த கொள்ளையில் 20 சவரன் தங்கநகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை
ராணிப்பேட்டை மாவட்டம் பெல் டவுன்ஷிப் குடியிருப்பு பகுதியில் அடுத்தடுத்து 8 வீடுகளில் பூட்டை உடைத்த மர்மநபர்கள், 20 சவரன் தங்கநகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிப்காட் அடுத்த பெல் டவுன்ஷிப் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் ஊழியர்கள் பலர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்றிரவு வீட்டில் யாரும் இல்லாத குடியிருப்புகளை நோட்டமிட்ட மர்மநபர்கள் சிலர், அடுத்தடுத்து 8 வீடுகளின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். தனித்தனியே பீரோவிலிருந்த 20 சவரன் தங்க நகைகள், மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். பக்கத்து வீட்டுகாரர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டி.எஸ்.பி.பிரபு மற்றும் சிப்காட் போலீசார், கைரேகை நிபுணர்களின் உதவியோடு தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.