சேலத்தில் சாலை விபத்தில் ஓட்டல் தொழிலாளி பலி

சேலத்தில் சாலை விபத்தில் ஓட்டல் தொழிலாளி பலி

Update: 2023-12-17 02:36 GMT

சேலத்தில் சாலை விபத்தில் ஓட்டல் தொழிலாளி பலி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள இருமத்தூர் பகுதியை சேர்ந்தவர் உபதேசன் (வயது 30). இவர் 5 ரோட்டில் உள்ள ஓட்டலில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த 11-ந் தேதி எருமாபாளையத்தில் உள்ள நண்பரை பார்க்க தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். சீலநாயக்கன்பட்டியில் பைபாஸ் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உபதேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News