குமரி பாதிரியார் நீதிமன்றத்தில் சரண்
அரசு ஊழியர் கொலை குற்றவாளி வழக்கில் குமரி பாதிரியார் நீதிமன்றத்தில் சரண்
By : King 24x7 Website
Update: 2024-01-24 17:49 GMT
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே மைலோடு மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் பாதிரியார் இல்லத்தில் கடந்த 20ந் தேதி அதே ஊரை சேர்ந்த அரசு போக்குவரத்து கழக ஊழியர் சேவியர் குமார்(45) அடித்து கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக தக்கலை திமுக ஒன்றிய செயலாளர் ரமேஷ்பாபு, மைலோடு பாதிரியார் ராபின்சன் உட்பட 15 பேர் மீது இரணியல் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். முக்கிய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி நாம் தமிழகர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு நாளை(26ந் தேதி) போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இக்கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக தேடப்பட்டு வந்த மைலோடு பாதிரியார் ராபின்சன், அவர் வகித்து வந்த மறைமாவட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் பாதிரியார் ராபின்சன் இன்று காலை திருச்செந்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.