இணையவழியில் வேலை எனக் கூறி பொறியாளரிடம் ரூ. 12.65 லட்சம் மோசடி

கும்பகோணத்தில் இணையவழியில் வேலை எனக் கூறி பொறியாளரிடம் ரூ. 12.65 லட்சம் மோசடி செய்தவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2024-04-27 16:14 GMT

கோப்பு படம் 

கும்பகோணத்தில் பொறியாளரிடம் இணையவழியில் பகுதி நேர வேலை எனக் கூறி ரூ.12.65 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்களைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர். கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய பொறியாளருக்கு இரு வாரங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில்,

குறிப்பிட்ட தொகை செலுத்தினால் அதிக லாபம் பெறலாம் என விளம்பரம் வந்தது. அதிலுள்ள இணைப்பைச் சொடுக்கியபோது, அது டெலிகிராம் குழுவுக்கு சென்றது. அதில் இருந்த போலி நபர்கள் இணையவழியில் பகுதி நேர வேலை என்றும், டாஸ்க்கள் மூலம் அதிக லாபம் பெறலாம் எனவும் கூறினர். இதை நம்பிய பொறியாளர் டாஸ்க்குகளை நிறைவேற்றி ரூ. 22 ஆயிரம் அனுப்பிய நிலையில் ரூ.5 ஆயிரம்தான் கிடைத்தது. இதையடுத்து,

ரூ.1.50 லட்சம் என பல்வேறு தவணைகளாக ரூ. 12.65 லட்சம் அனுப்பிய நிலையில், அவருக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தஞ்சாவூர் இணையதளக் குற்றப் பிரிவில் புகார் செய்தார். இதன் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News