தொழிலாளர்களை தடுக்கும் கட்ட பஞ்சாயத்த்து நபர்கள் மீது புகார்
வேலைக்கு செல்லும் தொழிலாளர்களை தடுக்கும் கட்ட பஞ்சாயத்த்து நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்.
By : King 24x7 Website
Update: 2023-12-24 17:26 GMT
வேலைக்கு செல்லும் தொழிலாளர்களை தடுக்கும் கட்ட பஞ்சாயத்த்து நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார். தர்மபுரி, டிச.24/12 / 2023 தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா வடகரை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில் எங்கள் கிராமங்களில் பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகிறோம் எங்கள் ஊரில் பெரிய அளவில் வாழ்வாதாரமும் தொழில் நிறுவனங்களும் இல்லாத காரணத்தினால் வேறு ஊருக்கு சென்று கூலி வேலை செய்து வந்ததாகவும். 2019 ஆம் ஆண்டு முதல் அந்தப் பகுதியில் அரசு அனுமதியுடன் தனியார் குவாரி மற்றும் கிரஷர் செயல்பட தொடங்கியது. இந்த நிறுவனத்தின் மூலம் எங்கள் ஊரில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வேலைக்கு செல்கிறோம். இதனால் எங்கள் கிராமத்தின் வாழ்வாராம் மேம்பட்டுள்ளது. இதனை சீர்குலைக்கும் வகையில் சில மர்ம நபர்கள் அந்த நிறுவனத்திடம் கட்டப்பஞ்சாயத்து செய்து மாமூல் கேட்டு மிரட்டுவதாகவும், கம்பெனிக்கு செல்லும் வழி பாதையை மறிப்பது, கம்பெனி உள்ளே புகுந்து வேலைக்கு வரும் ஆட்களை வேலை செய்ய கூடாது என மிரட்டல் விடுகின்றனர். இது குறித்து ஏற்கனவே கோபிநாதம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நடவடிக்கை எடுக்கபடாததால், கம்பெனியிடம் பணம் பறிக்கும் நோக்கத்துடனும் ஊருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கிலும் செயல்படும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.